ஜப்பானில் கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக செய்தி வெளியாகி உள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷிஜுவோகா பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்திய நேரடிப்படி இன்று காலை 10.30 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில், அப்பகுதியில் இருந்த குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வாகனங்கள் என அனைத்தும் மண்ணுக்குள் புதைந்தன.
குடியிருப்புகளில் வசித்து வந்த 20க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அனைத்து மின் கம்பங்களும் சரிந்து விழுந்ததால் 200க்கும் அதிகமான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
ஷிஜுவோகா பகுதியில், மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் யோஷிஹிடே சுகா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.