அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் 20 வருடங்களுக்கு பிறகு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மொஜாவே பாலைவனத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, தெற்கு கலிபோர்னியாவின் பெரும்பான்மையான பகுதிகளை தாக்கியுள்ளது . தற்போது ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்டை நாடான நெவாடாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.1 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில நாட்களில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, அமெரிக்க புவியியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.