மாற்றத்தக்க எரிசக்தி மூலம் மின் உற்பத்தி பெறுவதில் இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. பாரம்பரிய மற்றும் மாற்றத்தக்க எரிசக்தி மூலம் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் மின்உற்பத்தி குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த 2018 – 19 காலக்கட்டத்தில் தமிழகத்தில், அனல், புனல் மற்றும் அணுமின் நிலையங்கள் மூலம் 62 ஆயிரத்து 711 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றத்தக்க எரிசக்தியின் மூலம் 14 ஆயிரத்து 705 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாற்றத்தக்க எரிசக்தித் துறையில் கர்நாடகாவிற்கு அடுத்த படியாக தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.