வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு விசைத்தறி தொழிலாளி உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காளியம்மன்பட்டியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான ஜெயக்குமார், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்ட நிலையில், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும் விற்பனையாகாததால் ஜெயக்குமார் மனமுடைந்த காணப்பட்டார்.
இந்நிலையில், கடன் தொல்லை அதிகரித்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விசைத்தறி தொழிலாளி, தற்கொலைக்கு முன்பு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோவில், தமது கடன் இரட்டிப்பு ஆனதாக கூறியுள்ள அவர், ஒருவேளை உணவிற்கே வழியின்றி தவிப்பதால், தவறான முடிவை தேடிக்கொள்வதாக உருக்கத்துடன் பேசியுள்ளார்.
Discussion about this post