நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
வள்ளியூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் மூலம் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு 9 மாதங்கள் இப்பகுதியில் காற்று தொடர்ந்து வீசுவதால் மின் உற்பத்தி சீராக நடைபெறும். குறிப்பாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றில் வேகம் அதிகமாக இருக்கும். அப்போது காற்றாலைகளின் மின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளதால் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் வேகம் 25 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறது. தொடர்ந்து இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.