மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் மின் உற்பத்தி

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் மூலம் 406.5 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து தினமும் 460 மெகாவாட் மின்னுற்பத்தியை பெற அணையில் 120 அடி தண்ணீர் சேமிக்கப்பட்டு வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இந்தநிலையில் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான நீர்த்திறப்பு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியிலிருந்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியேற்றப்படும் நீரைக் கொண்டு அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம், நீர்தேக்கப் மின் நிலையங்களான செக்கானூர் உள்ளிட்ட 7 மின்நிலையங்களில் இருந்து மொத்தம் 406.5 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.

Exit mobile version