ஊரை அடித்து உலையில் போட்ட ப. சிதம்பரம் குடும்பம்

முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வெளி நாடுகளில் இருக்கும் சொத்து மற்றும் வங்கி இருப்பு பற்றிய முழு விவரங்களை, வருமான வரித் துறையின் சென்னை புலனாய்வு பிரிவு, 200க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட அறிக்கையாக வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது. அதில், வங்கிக் கணக்குகள், மற்ற வெளிநாட்டு நிறுவனங்களில் உள்ள முதலீடுகள் பற்றிய செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

வருமான வரி துறையும் அமலாக்கத் துறையும் நடத்திய பல சோதனைகளின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு, அறிக்கையாக அளிக்கப்பட்ட விவரங்களின்படி, கார்த்தி சிதம்பரத்துக்கும் அவரது நிறுவனத்துக்கும் பிரிட்டனில், மெட்ரோ வங்கியில் 21 வங்கிக் கணக்குகள் உள்ளன. சிங்கப்பூரில் உள்ள OCBC வங்கியில் ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் சிக்கிய கார்த்தியின் Advantage Strategic Consulting Pvt Ltd, என்ற நிறுவனத்துக்கு நான்கு வங்கிக் கணக்குகள் உள்ளது.

ஸ்பெயின் நாட்டில், சபாடேல் அட்லாண்டிக்கோ மற்றும் லா காக்சியா வங்கி ஆகிய இரண்டிலும் கணக்குகள் உள்ளன. மொனாக்கொவில் பார்க்லேஸ் வங்கியில் கணக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், பிரான்சு நாட்டில் மார்செயில், பி என் பி(BNP) பரிபாஸ் வங்கியிலும் சுவிட்சர்லாந்து நாட்டில் யூ பி எஸ் வங்கியிலும் கார்த்திக்கு கணக்குகள் உள்ளது. இந்த செய்தியின் கீழ் புலனாய்வு துறையினர் கண்டுபிடித்த கார்த்திக்கு 21 வெளி நாட்டு வங்கிகளில் இருக்கும் ரகசிய வங்கி கணக்கின் முழு விவரங்களும் தரப்பட்டுள்ளது.

கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் அட்வாண்ட்டேஜ், துபாயில் உள்ள டேசர்ட் டியுன்ஸ் பிராப்பர்ட்டிஸ் லிமிட்டட் என்ற நிறுவனத்திலும் பங்குவாங்கி இருக்கிறது. இந்த இரு நிறுவனங்களுக்குள் 1.7 மில்லியன் சிங்கப்பூர் டாலர்ஸ் பரிவர்த்தனை நடந்திருப்பதைப் புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள நிறுவனங்களுடன் கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனம் கூட்டுப் பங்கு வைத்திருந்து அதன் மூலமாக ஆசியாவின் சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெற்றது. இவ்வாறு கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனத்துடன் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த SM Arena Complex Corporation, Sports Entertainment Events Management Inc. ஆகிய நிறுவனங்கள் கூட்டு வைத்திருந்தன.

கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்துக்கு சிங்கப்பூரில் உள்ள Real Beyond Pvt. Ltd. என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் நிதி பரிவர்த்தனைகள் உண்டு. இநத நிறுவனத்துக்கு மலேசியாவிலும் மூன்று நிறுவனங்கள் உள்ளன. புலனாய்வு அமைப்புகள் இந்நிறுவனம் தாய்லாந்தில் பதினாறு இடங்களில் நிலம் வாங்கி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.

2006 இல் ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய மேக்சிஸ் நிறுவனம் ஊழலில் சிக்கிய மிகப் பெரிய நிறுவனம் ஆகும். வருமான வரி துறையினரும் அமலாக்கத் துறையினரும் முப்பது கோடிக்கும் மேலாக அந்நிய செலாவணியில் பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனம் ஸ்பெயின் நாட்டில் Advantage Estrategia Esportiva என்ற நிறுவனத்தை பார்சிலோனா என்ற நகரில் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. இது ஏழு டென்னிஸ் மைதானங்களைக் கொண்ட விளையாட்டு பயிற்சி கல்லூரி ஆகும்.

பிரான்சில் உள்ள பெம்ப்பிலோன் ஆர்கனைசேஷன் என்ற நிறுவனத்தில் கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது. இது தவிர கார்த்தி கிரேக்க நாட்டிலும் ஏதென்ஸ் நகரில் பிசானி ஜான் சகேல்லேரியோஸ் என்ற பெயரில் உள்ள ஒரு நிறுவனத்துடன் நிதி பரிவர்த்தனைகள் வைத்துள்ளார்.

இப்படி, உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களுடன் இணைந்து கோடான கோடி சொத்துக்களை சேர்ந்துள்ளது ப. சிதம்பம் குடும்பம். தற்போது நீங்கள் பார்த்தது, அந்த பட்டியலின் ஒரு பகுதியே…

Exit mobile version