திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே இளைஞர் ஒருவர் ஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் செய்து அதிக வருவாய் ஈட்டி வருகிறார்
கோட்டைப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் சரவணன் என்ற இளைஞர் தனது நிலத்தில் பல்வேறு பயிர்களுடன், நாட்டுக்கோழி,புறா ஆகியவற்றை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். பகல் முழுவதும் தோட்டங்களில் மேய்ச்சலுக்கு விடும் அவர் மண்ணில் உள்ள இயற்கை உணவின் மூலம் அவற்றை வளர்க்கிறார். இதனால் இயற்கை உணவை உண்டு வளரும் நாட்டுக்கோழி மற்றும் புறாக்களை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.