பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ளார். மேரி கோம் பயோபிக் திரைப்பட இயக்குனர் ஓமங் குமார், பிரதமர் மோடியின் வாழ்க்கையை படமாக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் நரேந்திர மோடியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், PM நரேந்திர மோடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மும்பையில் வெளியிட்டார். மோடி ஒரு உலகத் தலைவர் எனக் கூறிய பட்னாவிஸ், வரலாற்றை உருவாக்கும் திரைப்படமாக PM நரேந்திர மோடி படம் இருக்கும் என்றார்.
இந்த நிகழ்வில் ஓமங் குமார், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் படத்தை சந்தீப் சிங்குடன் இணைந்து விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராய் தயாரிக்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்தப் படத்தை ரிலீஸ் செய்யவும், 23 மொழிகளில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.