டெல்லி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: ஆம் ஆத்மி கட்சி வெற்றி

டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 40க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மொத்தம் 672 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த இந்தத் தேர்தலில், ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 61 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை வரும் 11ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்தநிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை, ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ், என்.டி.டி.வி போன்ற தனியார் தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளன. அதில், 40க்கும் மேற்பட்ட இடங்களில், ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரியவந்துள்ளது. பாஜக சுமார் 20 இடங்களில் வெற்றிபெறும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 2 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version