காந்தியின் திருவுருவ படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு கீழ் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப் படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள காந்தியின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Exit mobile version