பிரபல தெலுங்கு நடிகர் ரானா டகுபதி திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்…

 சமூக வலைதளத்தில் இதனை பதிவு செய்துள்ள ரானா டகுபதி, இருவரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மிஹீக்கா, மும்பையில் டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இவர், இந்திய கட்டுமானத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு, டிசைனிங் மற்றும் இண்டீரியர் டெகரேஷன் வேலைகளில் சிறந்து விளங்குகிறார். லண்டன் செல்சீ பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் வடிவமைப்பில் பட்ட மேற்படிப்பை முடித்துள்ளார். திருமணம் குறித்த ரானா டகுபதியின் பதிவுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிரஞ்சீவி, அனில்கபூர், ராம் சரன், துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அனுஷ்கா ஷெட்டி, ஸ்ரியா ரெட்டி என ஏராளமான பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Exit mobile version