குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் உடன்படிக்கைக்கு ஹாங்காங்கில் மக்கள் எதிர்ப்பு

ஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவிடம் விசாரணைக்கு ஒப்படைக்கும் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபடத்தை அடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.

குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக அந்நாட்டுடன் ஹாங்காங் ஒப்பந்தம் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு வலுத்து வந்ததால் ஹாங்காங் அரசு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. எனினும் சீனாவுடனான ஒப்பந்தத்தை நிரந்தரமாக கைவிடக்கோரியும் ஹாங்காங் தலைமை செயல் அதிகாரி கேரி லாம் பதவி விலகக் கோரியும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் கலவரம் போல் காட்சி அளித்தது.

Exit mobile version