பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் விண்வெளி வீரர்களுடன் உரையாடிய வைரல் வீடியோ

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுடன், பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தொடர்பு கொண்டு பேசிய போது, சந்திரயான் 2 விண்கலம் குறித்தும் கேட்டறிந்தார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட், ஆட் அஸ்ட்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்காக சுற்றுப்பயணம் செய்து வரும் அவர், நாசா தலைமையகத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுடன் கலந்துரையாடினார். அந்த விண்வெளி நிலையத்தில் தற்போது இரண்டு அமெரிக்கர்கள், இரண்டு ரஷ்யர்கள் மற்றும் ஒரு இத்தாலியர் என ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் ஒருவரான ஹேக் (( Hague )) என்பவருடன், பிராட் பிட் உரையாடும் போது, சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டரை பார்க்க முடிந்ததா என்று கேட்டார். அதற்கு அவர், துரதிஷ்டவசமாக நாங்கள் அதை பார்க்க முடியவில்லை என்று கூறினார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version