மைக்கேல் ஜாக்சன் போல இருக்கும் பாப் இசைக்கலைஞர்

மறைந்த மைக்கேல் ஜாக்சன் போல் அச்சு அசலாக பாப் கலைஞர் ஒருவர் உள்ளார். அவரிடம் ரசிகர்கள் பலர் டி.என்.ஏ பரிசோதனை செய்யும்படி வற்புறுத்தி வருகின்றனர்.

பாப் உலகின் மன்னனாக வலம் வந்தவர் மைக்கேல் ஜாக்சன். இவருக்கென்று உலகமெங்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்தார். இந்த நிலையில், அர்ஜென்டினாவின் பார்சிலோனாவில் பிறந்தவரும், தற்போது பாப் உலகில் வளர்ந்து வரும் கலைஞருமான செர்ஜியோ கோர்டெஸ், மறைந்த மைக்கேல் ஜாக்சனின் உருவத்துடன், அச்சு அசலாக உள்ளார்.

உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மைக்கேல் ஜாக்சனின் பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார். மைக்கேல் ஜாக்சனின் தோற்றத்துடன் இருக்கும் செர்ஜியோ கோர்டெஸ், தற்போது புகழ்பெற்று வருகிறார். சமீபத்தில் செர்ஜியோ கோர்டெஸ் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில் அவர், அனைத்து மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களுக்கும் வணக்கம்..  நான் உங்களை நேசிக்கிறேன். எனது இசை நிகழ்ச்சியை பாருங்கள் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், செர்ஜியோ கோர்டெஸ் தான், உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்கள் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் மறைந்து வாழ்வதற்காக தான் இறந்துவிட்டதாக நாடகம் ஆடுகிறார் என்றும், செர்ஜியோ கோர்டெஸ், தான் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுபற்றி செர்ஜியோ கோர்டெஸ் கூறும்போது, என்னை பார்த்த ஒரு பத்திரிகையாளர், நான் மைக்கேல் ஜாக்சன் தோற்றத்தில் இருப்பதாக கூறினார். என்னை மைக்கேல் ஜாக்சன் போன்று மேக்கப் போட்டு அவரது பத்திரிக்கையில் வெளியிட விரும்பினார். நான் அதை வேடிக்கையாக செய்தேன். பின்னர் அவர் என்னை சில சுவிஸ் தயாரிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் எனது புகைப்படத்தை வாசனை திரவிய விற்பனைக்கு பயன்படுத்த விரும்பினர். இது எல்லாம் எனது அன்றாட வாழ்க்கையில் தற்செயலாக நடந்தது என்கிறார் கோர்டெஸ்.

Exit mobile version