உதகை ரேஷன் கடைகளில் தரமில்லாத அரிசி, கோதுமை வழங்கப்படுவதாக புகார்

நீலகிரி மாவட்டம் உதகையில் தரமில்லாத அரிசி மற்றும் கோதுமை, ரேஷன் கடைகளில் வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உதகையில், முக்கிய வீதியில் இயங்கி வரும் நுகர்வோர் பண்டக சாலையில் தரமில்லாத கோதுமை மற்றும் அரிசி வழங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தற்போது கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரம் பாதித்துள்ள ஏழை மக்களுக்கு தரமில்லாத உணவு பொருட்களை வழங்கி அரசு தங்களை மேலும் சிரமத்திற்கு ஆளாக்குவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கு காலத்தில் ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version