ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம்: முதலமைச்சர் வழங்கினார்

அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை புரிந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார். அங்கன்வாடி பணியாளர்களுக்கு அலைபேசிகளை வழங்கிய முதலமைச்சர், 8 கோடியே 9 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 12 பணிகளை தொடங்கி வைத்தார். 30 கோடியே 62 லட்சம் மதிப்பிலான 17 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், 10 ஆயிரத்து 130 பயனாளிகளுக்கு 47 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு அதிகமான கடனுதவி வழங்கிய அரசு, அதிமுக அரசு என பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version