சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி செம்பரம்பாக்கம் சோழவரம் புழல் ஆகிய 4 ஏரிகளின் நீர்மட்டம் கிடு கிடு வென உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கி வரும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அதன்படி பூண்டி ஏரியின் நீர்மட்டம் 989 மில்லியன் கன அடியிலிருந்து, ஆயிரத்து 229 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. 96 மில்லியன் கன அடியாக இருந்த சோழவரம் ஏரியின் நீர்மட்டம் 131 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும், 639 மில்லியன் கனஅடியாக இருந்த புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது ஆயிரத்து 818 மில்லியன் கனஅடியாகவும், 749 மில்லியன் கன அடியாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 913 மில்லியன் கன அடியாகவும் உயர்ந்துள்ளது.