பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் இல்லத் திருமண விழா

அதிமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார். பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், மணமகனான ராகேஷ், மணமகள் பவித்ரா ஆகியோருக்கு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை முதலமைச்சர் நடத்தி வைத்தார். பின்னர், மணமக்களுக்கு மலர்க்கொத்து வழக்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் பங்கேற்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், நீலோபர்கபில், பாண்டியராஜன், பென்ஜமின், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Exit mobile version