பொன்னமராவதி கலவரத்திற்கு காரணமானவர்களில் 22 பேரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒரு சமூகத்தை தவறாக பேசி வாட்ஸ் ஆப்பில் வெளியிட்ட விவகாரம் காரணமாக நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தை ஏற்படுத்தியதாக கடந்த ஏப்ரல் மாதத்தில்,1000 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கலவரத்திற்கு முக்கிய காரணமான22 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 22 பேரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ பரிசோதனை செய்த காவல்துறையினர், பின்னர் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.