பொங்கலையொட்டி உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் இயற்கையான முறையில் உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரம் அதன் பற்றிய செய்தித் தொகுப்பு

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் மிகச் சிறப்பாக கொணடாடப்படுவது வழக்கம். பொங்கலில் மஞ்சள், உருண்டை வெல்லம் , உள்ளிட்ட மூலப்பொருள்கள் முக்கிய இடம் பெறுகின்றன. இதில் மஞ்சள் மற்றும் துணிவகைகள் தயாரிப்பதில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்து வருகிறது.

இதே போல உருண்டை வெல்லம் தயாரிப்பதிலும் ஈரோடு மாவட்டம் முதன்மை இடத்தை பிடித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, முள்ளம்பரப்பு, அரச்சலூர், கவுந்தபாடி இடங்களில் உருண்டை வெல்லம் நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. வெல்லம் தயாரிப்பதற்காக சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து கரும்புகள் பெறப்படுகின்றன.கரும்புகளை சாறு பிழிந்து கொப்பரையில் பாகு உற்பத்தி செய்து நாட்டு சர்க்கரையாகவும் உருண்டை வெல்லமாகவும் தயாரிக்கப்படுகிறது

ஈரோட்டில் தயாரிக்கப்படும் உருண்டை வெல்லம் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா,
ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. பொங்கலுக்கான மற்ற மூலப்பொருள்களின் விலை நாளுக்கு நாள் ஏறினாலும் வெல்லத்தின் விலை மாறாமல் நிலையாக உள்ளது. இதனால் தங்களுக்கு மிகக் குறைவான அளவிலேயே வருமானம் வருவதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே பகுதியில் 100 க்கும் மேற்பட்ட வெல்ல ஆலைகள் இருந்தாகவும் தற்பொழுது நாகரிகத்தின் வளர்ச்சியாலும் போதிய அளவு விலை இல்லாதாலும் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
எந்த வித ரசாயனமும் கலக்காமல் பாரம்பரிய முறையில் கைகளால் தயாரிக்கப்படும் உருண்டை வெல்லம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version