நாளை காணும் பொங்கலை முன்னிட்டு ஐந்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பொங்கல் திருவிழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை பெருகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பொங்கல் பரிசுகளையும், இனிப்புகளையும் ஆணையர் வழங்கினார்.அதனைத்தொடர்ந்து பரதநாட்டியம், கரகம், பொய்க்கால் குதிரை,உள்ளிட்ட நடனநிகழ்ச்சிகளும் நடைபெற்றன,விழாவில் கானா பாலாவின் போலீஸ் 2020 என்ற பாடல் குறுந்தகட்டை காவல் ஆணையர் விஸ்வநாதன் வெளியிட்டார் அதனைத்தொடர்ந்து அந்த பாடலை கானா பாலா பாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெருநகர காவல் ஆணையர், காணும் பொங்கலுக்கு ஐந்தாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளதாகவும் , போக்குவரத்து மாற்றங்களுக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.