திருவாரூரில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்க அரசாணை

திருவாரூரில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தை தவிர்த்து, பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்திலும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

அம்மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 92 ஆயிரத்து 952 நியாய விலை அட்டைத்தாரர்களுக்கு, மொத்தம் 39 கோடியே 29 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மக்கள், நாளை முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

Exit mobile version