காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையிலுள்ள சுற்றுலா தளங்கள் அனைத்துக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான காணும் பொங்களன்று சுற்றுலா தளங்களைக் காண வரும் பொதுமக்களின் வசதிக்காக அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதே போல் பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர், எம்.ஜி.எம், முட்டுக்காடு, கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல் போன்ற பகுதிகளுக்கு மொத்தமாக 480 சிறப்பு பேருந்துகள் சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.