பொங்கல் பரிசு தொகை! அரசின் கஜானாவுக்கே திரும்பி சென்றுள்ளது.

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகையாக 1,000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க, கடந்த மாதம் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனால், வெல்லத்திற்கு பதில் சர்க்கரையை போட்டு, எப்படி பொங்கல் வைப்பது என தமிழர்கள் குழம்பிப் போயினர். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் தொடர் வலியுறுத்தலுக்கு பணிந்து, விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்து விநியோகிக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரும்பு உட்பட, பொங்கலுக்கு தேவையான அனைத்துப் பொருட்களுடன், 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்க உத்தரவிட்டார். அப்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் வேண்டா வெறுப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு, வெறும் ஆயிரம் ரூபாயை பொங்கல் பரிசாக வழங்கியது. இதை வாங்க, தமிழகத்தில் சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் ஆர்வம் காட்டவில்லை. இதனால், 43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் அரசின் கஜானாவுக்கே திரும்பி சென்றுள்ளது.

Exit mobile version