காணும் பொங்கல் : மெரினாவில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்

காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திலிருந்து, பட்டினப்பாக்கம் வரை, லட்சக்கணக்கான மக்கள் குவிந்து காணும் பொங்கலை கொண்டாடினர். இதையொட்டி அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 12 தற்காலிக கோபுரங்கள் அமைத்துள்ள போலீசார், குதிரைப்படை, ஹெலிகாப்டர் மற்றும் ஜிப்ஸி வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக குழந்தைகள் மையம் அமைக்கப்பட்டு, அவர்களின் கையில் பெற்றோரின் அலைபேசி எண்ணுடன் கூடிய பட்டை பொருத்தப்படுகிறது. மேலும் கூட்டத்தில் தொலைந்த சிறுவர்கள், குழந்தைகள் மையம் மூலம் மீட்கப்பட்டு, அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதேபோல் அப்பகுதியில் உள்ள உணவுக்கடைகளில் காணும் பொங்கலையொட்டி விற்பனை அதிகரித்து காணப்பட்டது. மேலும் சென்னை மெரினாவில் இருந்து, மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் கூடுதலான பேருந்து வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காணும் பொங்கலையொட்டி, சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து, காணும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

Exit mobile version