ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கிவைக்கவுள்ளார்.
தமிழக மக்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதற்கான நிதி ஒதுக்கி இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்கரை, 20 கிராம் முந்திரி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 7ம் தேதிமுதல் பொங்கல் பரிசு தொகை மற்றும் பொருட்களை அந்தந்த நியாயவிலைக் கடையில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை, நாளை 10 பேருக்கு வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கவுள்ளார்.