பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் மக்களுக்கு கரும்புகள் வழங்கப்படுவதால், விவசாயிகளிடம் இருந்து அரசு நல்ல விலையில் செங்கரும்புகளை கொள்முதல் செய்வது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மக்களுக்கு பொங்கலை முன்னிட்டு பரிசுத் திட்டமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பச்சரிசி, சர்க்கரை உட்பட 2 அடி செங்கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மக்களுக்கு கரும்புகள் வழங்க, கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஒரு டன் செங்கரும்பு 6 ஆயிரத்து 600 ரூபாய்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்ற விலையுடன், அரசு செங்கரும்புகளை கொள்முதல் செய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.