தமிழகத்தில் வழங்கப்படும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் ஐந்து வகை இருக்கின்றது. இதில் எந்தெந்த பிரிவில் எத்தகைய பொருட்கள் வழங்கப்படுகின்றன என்பதையும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, எந்த அட்டைதாரருக்கு பொங்கல் பரிசான ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பதையும் இப்போது பார்ப்போம்..
தமிழகத்தில் PHH கார்டுகள் எனப்படும் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பெறும் முன்னுரிமை அட்டைகள் 76 லட்சத்து 99 ஆயிரத்து 940 உள்ளன.
PHH – AAY கார்டுகள் எனப்படும் மத்திய, மாநில அரசின் உதவியுடன் 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பெறும் முன்னுரிமை அட்டைகள் 18 லட்சத்து 64 ஆயிரத்து 600 உள்ளன.
மாநில அரசின் முழு உதவியுடன் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படும் NPHH முன்னுரிமை அட்டைகள் 90 லட்சத்து 8 ஆயிரத்து 842 ம் உள்ளன.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மேற்கண்ட குறியீடு கொண்ட குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள் ஆயிரம் ரூபாய் பணம் வாங்க தகுதி பெற்றுள்ளனர்.
அதன்படி ஒரு கோடியே 85 லட்சத்து 73 ஆயிரத்து 382 அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க எந்த தடையும் இல்லை.
அதே நேரம் NPHH-S கார்டுகள் என்றழைக்கப்படும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் 10 லட்சத்து ஆயிரத்து 605 ம், முகவரிக்காக பயன்படுத்தப்படும் NPHH-NC கார்டுகள் 41ஆயிரத்து 106 ம் உள்ளன. இவர்களுக்கு உயர் நீதிமன்ற உத்தரவால் ஆயிரம் ரூபாய் பணம் கிடைகாத நிலை உள்ளது
இதில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது அரசு உதவி மையம் எண்கள் 1967/18004255901-ஐ தொடர்புகொள்ளலாம்.