பொங்கல் பண்டிகை: சேலத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டம் முழுவதும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சேலம் மாவட்ட காவல்துறையினர் குற்றச்சம்பவங்களை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் மத்திய பேருந்து நிலையத்தில் 17 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை மாநகர காவல் ஆணையாளர் சங்கர் திறந்து வைத்தார். இது மட்டும் இன்றி டிஜிட்டல் தகவல் பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version