பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்காக சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வரும் 14 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரயில் நிலையம், மாதவரம், பூவிருந்தவல்லி, கே.கே நகர் ஆகிய 6 இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கே.கே நகரில் இருந்து ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
தாம்பரம் சானடோரியத்தில் இருந்து பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூருக்கும், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலைக்கும் பேருந்துகள் புறப்படும். பூவிருந்தவல்லியில் இருந்து, வேலூர், ஆரணி, ஆற்காடு திருப்பத்தூர், காஞ்சிபுரம் செய்யாறு ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. தென்மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.