தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் இன்று தமிழர் திருநாளான பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் தை முதல் நாளை தமிழர்கள் பொங்கல் விழாவாக கொண்டாடுகின்றனர். இந்நாளில் இல்லங்கள் முன்பும், அறுவடை செய்த நிலங்களிலும் புதுப்பானை வைத்து, கரும்புடன் பொங்கல் இட்டு, விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கும் இயற்கைக்கும் மக்கள் நன்றி தெரிவிப்பார்கள். இதைத்தொடர்ந்து பட்டி பெருக, பால் பொங்க, பொங்கலோ பொங்கல் என்று கூறி, கால்நடைகளுக்கு பொங்கலை உண்ணக்கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இதைப்போன்று தமிழர்கள் வாழ்கிற இலங்கை, மலேசியா, கனடா மற்றும் பல்வேறு நாடுகளிலும் இன்று பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 

Exit mobile version