சிவகங்கையில் பொங்கல் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது…
காரைக்குடி அருகேயுள்ள மானகிரியில் நடைபெற்ற இந்த போட்டியில், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 37 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டிகளில், 17 ஜோடி பெரிய மாடுகளும், 20 ஜோடி சிறிய மாடுகளும் பங்கேற்றன.பெரிய மாட்டு வண்டிகளுக்கு 8 கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாட்டு வண்டிகளுக்கு 6 கிலோ மீட்டர் தூரமும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், பெரிய மாடுகள் பிரிவில், மதுரை மாவட்ட மாடுகளும், சிறிய மாடுகள் பிரிவில், புதுக்கோட்டை மாடுகளும் முதலிடத்தை தட்டி சென்றன. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
Discussion about this post