கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்து பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் தொடக்கவிழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசாக அரிசி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.மேலும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்படும் என்று கூறினார்.முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும்,கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், வருவாய் துறை அமைச்சர் ஆர் .பி.உதயகுமார்,சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.