பொங்கல் பண்டிகையை சென்னை வடபழனியில் பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தைத்திருநாள் என்றாலே பொங்கலையும், கரும்பையும் தாண்டி நினைவுக்கு வருவது, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களும், நடனங்களும் தான். தனியார் மற்றும் தாராள மயமான சென்னையில், நமது பாரம்பரியங்கள் அழிந்து வருவதாக, தமிழறிஞர்கள் வேதனை தெரிவித்து வரும் நிலையில், வடபழனியில் ஏராளமானனோர் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். தனியார் வணிக வளாகத்தில் நடந்த பொங்கல் விழாவில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், உரியடித்தல் போன்றவை இடம் பெற்றன.