தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

முறையான கால முறை சம்பளம் பெறும் அனைத்து சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள், உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன பணியாளர்கள் ஆகியோருக்கு போனஸ் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 2017-18 ம் ஆண்டை கணக்கிட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகையை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

மாதாந்திர ஊதியம் 3 ஆயிரத்தை உச்சவரம்பாக கொண்டு இந்த தற்காலிக மிகை ஊதிய தொகை கணக்கிடப்படும். திருத்திய சம்பள ஊதியத்தை பெறுபவர்கள் மாதம் ஒன்றிற்கு 3 ஆயிரத்துக்கு உட்பட்டு கணக்கிடவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version