புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கையால் மாநிலத்தின் வளர்ச்சி முடங்கியுள்ளதாக கூறி முதல்வர் நாராயணசாமி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
கவர்னர் மாளிகையில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என ஏராளமானோர் தர்ணாவில் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி கூறுகையில் ஆளுநரின் தலையீடுகளால் எந்த திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றார்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த கிரண்பேடி விடுத்த அழைப்பையும் முதல்வர் நாராயணசாமி ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் ஆளுநரை கண்டித்து இன்று நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், இரண்டு நாள்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் நாராயணசாமி அறிவித்துள்ளார்