விழுப்புரத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் குளம் சீரமைப்பு பணிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையிட்டார்.
விழுப்புரம் நகராட்சி மேம்பாட்டு பணிக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள குளத்தை சீரமைக்க, ஒன்றரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளை, கடந்த நவம்பர் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில் 2 மீட்டர் ஆழத்தில் நீர் நிரப்பும் வகையில் குளம் சீரமைக்கப்படுகிறது. மேலும் குளத்தை சுற்றி பூங்கா, உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையிட்டார். மேலும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இன்னும் 8 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.