தமிழகத்தை பாதிக்கும் எந்த அணைகளையும் பிற மாநிலங்களில் கட்டக்கூடாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு மோடியின் எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகத்தின் தமிழாக்கத்தை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணனிடம், மேகதாது அணை குறித்து கேள்வி எழுப்பபட்டது.
அப்போது, தமிழகத்தை பாதிக்கும் எந்த அணைகளையும் பிற மாநிலங்களில் கட்டுவது சரியாக இருக்காது. குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் கட்டுவது சரியல்ல என தெரிவித்தார்.
மேலும் புயல் பாதித்த பகுதிகளுக்கு பிரதமர் நேரடியாக வராவிட்டாலும், தமிழக அமைச்சர்களை மத்திய அமைச்சர்கள் தொடர்பு கொண்டு நிலைகுறித்து கேட்டறிந்து வருவதாகவும் தெரிவித்தார்.