திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா என்பது குறித்து திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், நகராட்சி அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். நகராட்சி ஆணையர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 10 வணிக நிறுவனங்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சட்ட விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையர் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.