உலகிலேயே முதன்முறையாக லண்டன் நகரில் மாசுக் கட்டுப்பாட்டு மண்டலம்

காற்று மாசுபடுவதை தடுக்க, உலகிலேயே முதன்முறையாக லண்டன் நகரில் மாசுக் கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது

வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்று மாசினை குறைக்க பல்வேறு முயற்சிகளை லண்டன் நகர அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நகரத்தின் உள்ளே இயக்கப்படும் வாகனங்களின் புகை வெளியிடும் அளவில், பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்கள் யூரோ 4 தர நிலையிலும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் யூரோ 6 தர நிலையிலும் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அன்றாடம் அபராதம் விதிக்கப்படும் என்று லண்டன் மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வாரத்தின் 7 நாட்களிலும், 24 மணிநேரமும் மாசு கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version