சேலத்தில், பெய்துவரும் மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், சாயக்கழிவுகள் அதிகம் கலக்கப்படுவதால், திருமணிமுத்தாற்றில் நுரை பொங்கி வழிகிறது.
சேலம் கொண்டலாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாயப் பட்டறைகள் மற்றும் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீர் காரணமாக, திருமணிமுத்தாறு கழிவுநீர் கால்வாயாக காட்சி அளிப்பதோடு மழைக்காலங்களில் அதிக அளவில் நுரை பொங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக, திருமணிமுத்தாறில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் உத்தமசோழபுரம், பூலாவரி, ஆத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பாயும் திருமணிமுத்தாறில் நுரை பொங்கி, துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, திருமணிமுத்தாறில் கழிவுநீர் கலக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.