வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யமுடியும் என சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்கு வாக்குச் சீட்டு முறையினை பயன்படுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என வாக்குப் பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சையது சுஜா குற்றச்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, வரும் மக்களவை தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் ஏன் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.