பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக் மூலம் காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து அவர்களிடம் பணம் பறித்துள்ளனர். இளம்பெண்களை பாலியல் பலாத்கார வீடியோவும் எடுத்து உள்ளனர். இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகரின் பேரில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

Exit mobile version