பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தைக் கண்டித்து கடையடைப்பு போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கை முறையாக விசாரிக்கக் கோரியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரியும், பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை முறையாக விசாரிக்கக் கோரியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரியும், பொள்ளாச்சியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதியில் 70 சதவிகித கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போராட்டம் காரணமாக, கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் காய்கறி ஏற்றுமதி பணிகள் முடங்கின.

Exit mobile version