கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற வேட்பாளர் மகேந்திரனின் அறிமுக கூட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகமெங்கும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டங்கள் மற்றும் பிரசாரம் வெகு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வால்பாறையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2014ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மகேந்திரன், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், மகேந்திரனை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்ய வேண்டும் என்றும், 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.