பொள்ளாச்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் பாலம், புறவழிச்சாலை வளர்ச்சி பணிகள் குறித்து சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு மேற்கொண்டார். பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்த தாசில்தார்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தலுக்குள் நலத்திட்டப் பணிகளை விரைவு செய்ய கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Exit mobile version