திமுகவில் உட்கட்சி பூசல்களுக்குப் பஞ்சமே கிடையாது என்பதும், அவர்களுக்குள்ளே அடித்துக் கொள்வதும் சர்வசாதாரணமான ஒன்று என சொல்லப்படுவது உண்டு. இதனை மெய்ப்பிப்பது போல் திமுக நிர்வாகி ஒருவர் பேசி வெளியிட்ட ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சண்முகப்பிரியாவின் கணவர், வெல்லம் சீனிவாசன். இவர், பொள்ளாச்சி 36-வது வார்டு திமுக பிரதிநிதியாக உள்ளார். பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜனை கொலை செய்யப்போவதாகவும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்றும் இவர் பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள சம்பவம் திமுகவினரின் அராஜகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.