பொள்ளாச்சி வழக்கை உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பில் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வரும்நிலையில், வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Exit mobile version