பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதையடுத்து, சிபிசிஐடி போலீசார் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி நிஷா தலைமையிலான குழுவினர், பொள்ளாச்சி அருகே சின்னப்பன்பாளையம் கிராமத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் ஆய்வு நடத்தினர்.
6 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் கொண்ட குழு, அரை மணி நேரம் தமது முதற்கட்ட விசாரணையை நடத்தினர். மேலும், திருநாவுக்கரசின் பண்ணை வீட்டு, கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததால், அங்குள்ள தடயங்களை யாரும் அழிக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.